பிவண்டி அருகே தந்தையை அடித்து கொன்றவருக்கு வலைவீச்சு வேலைக்கு செல்லும்படி கூறியதால் ஆத்திரம்

பிவண்டி அருகே தந்தையை அடித்து கொன்றவருக்கு வலைவீச்சு வேலைக்கு செல்லும்படி கூறியதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 19 Dec 2017 9:45 PM GMT (Updated: 2017-12-20T03:03:21+05:30)

பிவண்டி அருகே வேலைக்கு செல்லும் படி கூறிய தந்தையை அடித்து கொன்றவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தானே,

பிவண்டி அருகே வேலைக்கு செல்லும் படி கூறிய தந்தையை அடித்து கொன்றவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தகராறு

தானே மாவட்டம் பிவண்டி தாலுகாவில் உள்ள பாயா கிராமத்தை சேர்ந்தவர் தர்மா திண்டா (வயது70). இவரது மகன் சுரேஷ்(45). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக ஊர்சுற்றி வந்தார். அவரை வேலைக்கு செல்லும்படி தர்மா திண்டா திட்டி வந்துள்ளார். இதனால் தந்தை, மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்றும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த சுரேஷ் தந்தை என்று கூட பாராமல் தர்மா திண்டாவை சரமாரியாக தாக்கினார்.

கொலை

இதில், அவர் சுருண்டு விழுந்து பலியானார். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் தர்மா திண்டாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து சுரேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சுரேசை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story