ரெயில்வேயில் 3199 பயிற்சிப் பணி


ரெயில்வேயில் 3199 பயிற்சிப் பணி
x
தினத்தந்தி 20 Dec 2017 10:36 AM IST (Updated: 20 Dec 2017 10:36 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையில் அப்ரண்டிஸ் (பயிற்சிப்) பணிக்கு ஆயிரக்கணக் கானவர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையில் அப்ரண்டிஸ் (பயிற்சி) பணிக்கு ஆயிரக்கணக் கானவர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது வடக்கு ரெயில்வே மண்டலத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு 3 ஆயிரத்து 162 இடங்களும், விளையாட்டு ஒதுக்கீடு மற்றும் சாரணர் ஒதுக்கீடு அடிப்படையில் 37 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 27-1-2018-ந் தேதியில் 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஐ.ஐ.டி. படித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி மற்றும் பணித்திறன் அடிப் படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் www.rrcnr.org என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 28-12-2017 அன்று விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வருகிறது. 27-1-2018 வரை விண்ணப்பிக்கலாம்.




Next Story