துணை ராணுவ படையில் 487 வேலைகள்


துணை ராணுவ படையில் 487 வேலைகள்
x
தினத்தந்தி 20 Dec 2017 10:56 AM IST (Updated: 20 Dec 2017 10:56 AM IST)
t-max-icont-min-icon

துணை ராணுவப்படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 487 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். என்று அழைக்கப்படுகிறது. மத்திய துணை ராணுவ படைப் பிரிவுகளில் ஒன்றான இந்த படைப்பிரிவில் தற்போது கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 28 மாவட்டங்களில் 487 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்தில் 17 இடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 11-1-2018-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் 100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 11-1-2018-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://cisfrectt.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Next Story