‘எய்ம்ஸ்’ மருத்துவ மையத்தில் 1096 பணியிடங்கள்


‘எய்ம்ஸ்’ மருத்துவ மையத்தில் 1096 பணியிடங்கள்
x
தினத்தந்தி 20 Dec 2017 11:00 AM IST (Updated: 20 Dec 2017 11:00 AM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் ஸ்டாப் நர்ஸ், ஜூனியர் ரெசிடென்ட் போன்ற பணிகளுக்கு 1096 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக ‘எய்ம்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள இதன் கிளை மருத்துவ மையங்கள்- கல்வி மையங்களில் தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் சீனியர் நர்சிங் ஆபீசர், ஸ்டாப் நர்ஸ், நர்சிங் ஆபீசர், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு2) ஆகிய பணிகளுக்கு 927 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சீனியர் நர்சிங் ஆபீசர் மற்றும் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு மட்டும் 127 இடங்களும், நர்சிங் ஆபீசர் மற்றும் ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 800 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தகுதிகள்:

சீனியர் நர்சிங் ஆபீசர்/ ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களும், நர்சிங் ஆபீசர் / ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-2) பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 25-12-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

பி.எஸ்சி. நர்சிங் 4 ஆண்டு படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள், நர்சிங் மிட்வைபரி படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இவர்கள் நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பதோடு, குறிப்பிட்ட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் கணினித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. www.aiimsbhubaneswar.edu.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25-12-2017-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.

ஜோத்பூர் எய்ம்ஸ்:

இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி ஜோத்பூர் எய்ம்ஸ் மையத்தில் கற்பித்தல் சார்ந்த பணிகளுக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணிகளுக்கு அனஸ்தீசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, ஜெனரல் மெடிசின், ஹாஸ்பிட்டல் அட்மின், மெடிக்கல் ஆன்காலஜி, நியூக்ளியர் மெடிசின், ஆப்தமாலஜி, மெடிசின் உள்ளிட்ட பிரிவுகளில் வாய்ப்பு உள்ளது. இந்த பிரிவுகளில் முதுநிலை மருத்துவ பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 18-12-2017-ந் தேதி கடைசி நாளாகும்.

இன்றொரு அறிவிப்பின்படி ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் சீனியர் ரெசிடென்ட் பணிக்கு 124 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அனஸ்தீசியாலஜி, அனடாமி, பயோகெமிஸ்ட்ரி, பர்ன்ஸ் பிளாஸ்டிக், பயோகெமிஸ்ட்ரி, கார்டியாலஜி, கார்டியோரெசிக், கம்யூனிடி மெடிசின், டென்டிஸ்ட்ரி, மெடிக்கல் ஆன்காலஜி, மைக்ரோபயாலஜி, நெப்ராலஜி, சைகாலஜி, சைகியாட்ரி, பல்மோனரி மெடிசின் உள்ளிட்ட 41 மருத்துவ பிரிவில் பணிகள் உள்ளன. இந்த பணியிடங்களில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.எஸ்., எம்.டி., டி.என்.பி., மருத்துவம் சார்ந்த எம்.எஸ்சி. அறிவியல் படிப்புகள், பி.எச்டி. மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 22-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

Next Story