திருச்செந்தூரில் தம்பதியிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளி கைது
திருச்செந்தூரில் தம்பதியிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் தம்பதியிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
போலீசார் ரோந்து பணி
திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்தூர்- பரமன்குறிச்சி ரோடு சுடலைமாட சுவாமி கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்றவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அந்தோணி அலெக்ஸ் ஜெயந்தன் (வயது 36) என்பது தெரிய வந்தது.
கைது
மேலும் இவர் கடந்த 15-2-2015 அன்று தன்னுடைய நண்பர்களான அப்பகுதியைச் சேர்ந்த ரூபஸ்டன், பிஷோன், ஜிஜோ ஆகியோருடன் சேர்ந்து, திருச்செந்தூர் கந்தசாமிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தூத்துக்குடி அண்ணாநகர் 7-வது தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (25), அவருடைய மனைவி பேச்சியம்மாள் (21) ஆகியோரை வழிமறித்து, அவர்களிடம் 2½ பவுன் தங்க சங்கிலி, செல்போன், ரூ.500 ஆகியவற்றை பறித்து சென்றதும்,
குலசேகரன்பட்டினம் காரைக்கால் அம்மையார் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரின் மீது மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது. எனவே அந்தோணி அலெக்ஸ் ஜெயந்தனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரூபஸ்டன், பிஷோன், ஜிஜோ ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story