பாதாள சாக்கடை பணிகளை விரைவுபடுத்தி முடிக்கக்கோரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு
பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைவுபடுத்தி தார்சாலை அமைக்கக்கோரி திருப்பத்தூரில் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு நடத்தி ஊர்வலமாக சென்று சப்-கலெக்டர்அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆட்டோக்களும் ஓடாததால் நகரமே வெறிச்சோடியது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.105 கோடி மதிப்பீட்டில் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு பணிகளை தொடங்கியது. இதனையொட்டி நகரில் 36 வார்டுகளில் உள்ள தெருக்கள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் எந்த பகுதியிலும் பணிகள் முழு அளவில் முடிக்கப்படவில்லை. குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளிலும் அரைகுறையாகவே பள்ளம் மூடப்பட்டுள்ளது. கடந்த 2½ ஆண்டுகளாக மந்தமாக பணிகள் நடக்கிறது என வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
வெயில் அடித்தால் புழுதி பறக்கும் சாலைகளாகவும், மழை பெய்தால் சேறாகவும் புதைகுழியாகவும் சாலைகள் மாறின. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் புதைகுழிகளாக மாறிய சாலையில் சிக்கியும், குழிகளில் விழுந்து காயத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டனர்.
தெருக்களுக்குள் ஆட்டோக்களும் வர மறுத்ததோடு கூடுதல் கட்டணம் கேட்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பணிகள் முடிந்து விடும் என நினைத்து பல மாதங்கள் பொறுமை காத்த வியாபாரிகள் பொங்கி எழுந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
அதன்படி அனைத்து வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம், பாத்திர வியாபாரிகள், ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்கம், பொன்நகை தொழிலாளர் சங்கம், இரும்பு பொருள் வியாபாரிகள் சங்கம் உள்பட அனைத்து தரப்பினரும் நேற்று கடைகளை அடைத்தனர். ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடையடைப்பு செய்த வியாபாரிகள் திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு வர்த்தக சங்க தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வேணுகோபால், பொருளாளர் ராஜா, துணை தலைவர் வாசுதேவன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், உதவி செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் நகை வியாபாரிகள் சங்க தலைவர் பி.கணேஷ்மல், வணிகர் பேரமைப்பு மாநில துணை செயலாளர் ஆர்.ஜி.வெங்கடாசலம், பொன் வெள்ளி நகை தொழிலாளர் சங்க தலைவர் பாபு, செயலாளர் சுப்பிரமணியன், நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்க தலைவர் ஏ.செந்தில்முருகன், ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்க நிர்வாகி மஞ்சுநாதா பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நகராட்சிப் பகுதியில் சாலை அமைக்க ரூ.20 கோடி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு வாணியம்பாடி மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின்ரோடு, தாலுகா அலுவலகம் வழியாக சப்-கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாக்கியலட்சுமியிடம் அவர்கள் மனு அளித்தனர்.
போராட்டத்தையொட்டி திருப்பத்தூரில் டீக்கடைகள், ஓட்டல்கள் முதல் மளிகைக்கடை, மருந்துக்கடைகள் வரை ஒரு கடை கூட திறக்கப்படவில்லை. இதனால் பரபரப்பாக காணப்படும் வாணியம்பாடி ரோடு, சேலம் சாலை, அவுசிங்போர்டு, ஆலங்காயம் ரோடு உள்பட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடியது. மேலும் வக்கீல்களும் கோர்ட்டை புறக்கணித்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story