பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி சந்தையில் ரூ.6 கோடிக்கு மாடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி மணப்பாறை மாட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது.
மணப்பாறை,
பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது மாட்டு பொங்கல். உழவனுக்கும், உழவுக்கும் கைகொடுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கடும் வறட்சியால் விவசாயம் பொய்த்து விட்ட நிலையில் கால்நடைகளுக்கு கூட போதிய தீவனம் இல்லாததால் விவசாயிகள் பலர் மாடுகளை விற்றனர். மாடுகளை வாங்க ஆட்கள் இல்லாததால் மிகவும் குறைந்த விலைக்கு மாடுகளை விற்றனர்.
ஆனால் சமீபத்தில் அவ்வப்போது பெய்த மழையினால் பல்வேறு இடங்களில் புல், செடி, கொடிகள் வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது. இதுமட்டுமின்றி விவசாயிகள் பலரும் தங்களின் விளை நிலங்களில் சோளம், கம்பு உள்ளிட்டவற்றை பயிர் செய்து அவையும் ஓரளவு வளர்ந்துள்ளது. இதனால் மாடுகளுக்கு எளிதில் தீவனம் கிடைப்பதால் மீண்டும் மாடுகளை வாங்கி வளர்க்க விவசாயிகளுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
மணப்பாறையில் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும் மாட்டுச்சந்தை புகழ்பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் வந்து தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கிச் செல்வார்கள். இதனால் மணப்பாறை மாட்டுச்சந்தையில் பசு மாடு, ஜெர்சி மாடு, நாட்டு மாட்டினங்கள், ஜல்லிக்கட்டு காளைகள், எருமைகள், வண்டி மாடு, உழவு மாடு என மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் குறைந்த விலையில் விற்பனையான மாடுகள் தற்போது அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றது. கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதால் விவசாயிகள் பலரும் மாடுகளை வாங்க நேற்று சந்தையில் குவிந்தனர். இதுமட்டுமின்றி பொங்கல் பண்டிகையும் நெருங்கி விட்டதால் வழிபாட்டிற்காகவும், கறவைக்காகவும், உழவுக்காகவும் பலர் மாடு வாங்க திரண்டிருந்தனர். இதனால் வழக்கமாக ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையாகும் மாடுகள், ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த எந்த தடையும் இல்லை என்று கோர்ட்டு அறிவித்துள்ளதால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு காளைகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண ஜல்லிக்கட்டு ரக கன்றுக்குட்டி ரூ.50 ஆயிரம் வரை விலைபோனது. சந்தையில் இந்த வாரம் கறவை மாடுகள் மற்றும் உழவு மாடுகள் தான் அதிக அளவில் விற்பனை நடைபெற்றது. விலை அதிகரித்து காணப்பட்டாலும் மாடு வாங்கியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருந்த விவசாயிகள் பலரும் தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கிச் சென்றனர்.
இந்த வாரமே கடுமையான விலையேற்றம் உள்ள நிலையில் அடுத்து வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மாடுகளின் விலை உச்சத்தை தொட்டு விடும் என வியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மாட்டுச்சந்தை நேற்று மதியம் வரை நடைபெற்றது. இதில் சுமார் ரூ.6 கோடி வரை மாடுகள் விற்பனை நடைபெற்றது.

Related Tags :
Next Story