மும்பையில் செயல்படுத்தப்படும் 6–வது மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை டி.எம்.ஆர்.சி. மேற்கொள்கிறது
மும்பையில் செயல்படுத்தப்படும் 6–வது மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் மேற்கொள்ள உள்ளது.
மும்பை,
மும்பையில் செயல்படுத்தப்படும் 6–வது மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் மேற்கொள்ள உள்ளது.
மெட்ரோ ரெயில் திட்டம்மும்பையில் சுவாமி சமர்த் நகர்– ஜோகேஸ்வரி– விக்ரோலி இடையே 6–வது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
14.5 கி.மீ. தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் சுவாமி சமர்த் நகர், ஆதர்ஸ் நகர், மோமின் நகர், ஜே.வி.எல்.ஆர்., ஷியாம் நகர், மகாமல்லி கேவ்ஸ், சீப்ஸ் வில்லேஜ், சாக்கிவிகார் ரோடு, ராம்பாக், பவாய் ஏரி, ஐ.ஐ.டி. பவாய், காஞ்சூர்மார்க் மேற்கு, விக்ரோலி கிழக்கு விரைவு சாலை ஆகிய 13 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.
இந்த மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.5 ஆயிரத்து 490 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
டெல்லி மெட்ரோ ரெயில் கழகம்6–வது மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகளை மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) சார்பில் டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் (டி.எம்.ஆர்.சி.) மேற்கொள்கிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்றுமுன்தினம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் எம்.எம்.ஆர்.டி.ஏ.வின் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு கோட்ட தலைமை அதிகாரி விஜயலட்சுமி, கூடுதல் கமிஷனர் பிரவின் தாரடே, டெல்லி மெட்ரோ ரெயில் கழக தொழில் மேம்பாட்டு இயக்குனர் எஸ்.டி.சர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் ஒப்பந்ததாரர்களை நியமிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உள்ளது.