கிரானைட் நிறுவனத்தில் தீ விபத்து; வடமாநில ஊழியர் சாவு 4 பேர் படுகாயம்


கிரானைட் நிறுவனத்தில் தீ விபத்து; வடமாநில ஊழியர் சாவு 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Dec 2017 3:45 AM IST (Updated: 22 Dec 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே கிரானைட் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வட மாநில ஊழியர் பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டியில், தனியாருக்கு சொந்தமான கிரானைட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் உள்ள அறையில் ஊழியர்கள் சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

அந்த நேரம் எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து, தீ விபத்து ஏற்பட்டது. இதில் அசாம் மாநிலம் பார்சுலா மாவட்டத்தைச் சேர்ந்த பிரனாப் குமார் (வயது 20) மற்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ, அமீத் சஞ்சல், காம்பூர், ஜிங்தாவு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஒருவர் பலி

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரனாப்குமார் இறந்தார். மற்ற 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story