உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
வேளாண்மைத்துறை சார்பில், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.
ஈரோடு,
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில், மேற்கு மண்டலத்தை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு கூட்டு பண்ணைய திட்டம் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி ஈரோட்டில் நேற்று தொடங்கியது. பயிற்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் எஸ்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
கூட்டு பண்ணைய திட்ட ஆர்வலர் குழு என்பது 20 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டது ஆகும். 5 ஆர்வலர் குழுக்கள் இணைந்தது உழவர் உற்பத்தியாளர் குழு ஆகும். 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் இணைந்து 1,000 விவசாயிகளுடன் செயல்பட்டால் அது உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும்.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் 3 ஆயிரம் விவசாயிகளுடன் 3 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 4 நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி விவசாயிகள் சேர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கினால், அதன் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டி சந்தையில் விற்பனை செய்யலாம்.
ஒவ்வொரு உழவர் உற்பத்தி குழுவுக்கும் அரசின் ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த தொகையை கொண்டு 100 விவசாயிகள் பொதுவில் உபயோகிக்கும் விதமாக உழவு செய்யும் கருவிகள், எந்திரங்கள் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.
இதில் கூட்டு பண்ணைய திட்ட மாநில ஆலோசகர் வடிவேல் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஊட்டி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக வேளாண்மை இணை இயக்குனர் பிரேமலதா வரவேற்று பேசினார். முடிவில் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Related Tags :
Next Story