பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2017 10:15 PM GMT (Updated: 2017-12-23T01:34:52+05:30)

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எண்ணூர் பனிமணையில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்களில் கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

* கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் இடையே காலை 11.20 மணி, மதியம் 2.40 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.25 மணி, 11.35 மணி மற்றும் மதியம் 1.25 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் எண்ணூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு எண்ணூர் வரை இயக்கப்படும்.

சிறப்பு ரெயில்

* மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்படுகிறது.

* கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் இடையே காலை 10.50 மணி, மதியம் 12.55 மணி மற்றும் 1.35 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கும்மிடிப்பூண்டி - எண்ணூர் இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு, எண்ணூர் - மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும்.

* கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை இடையே சிறப்பு மின்சார ரெயில் மதியம் 2 மணிக்கு இன்றும், நாளையும் இயக்கப்படும்.

Next Story