ஜெயலலிதா சிகிச்சை பற்றிய வீடியோ வெளியீடு: வெற்றிவேல் முன்ஜாமீன் மனு தள்ளுபடி சென்னை கோர்ட்டு உத்தரவு


ஜெயலலிதா சிகிச்சை பற்றிய வீடியோ வெளியீடு: வெற்றிவேல் முன்ஜாமீன் மனு தள்ளுபடி சென்னை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-23T01:37:52+05:30)

ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ காட்சியை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கடந்த 20-ந் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வெற்றிவேல் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இந்தநிலையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வெற்றிவேல் சென்னையில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சுபாதேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் வெற்றிவேல் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story