துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்


துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Dec 2017 4:30 AM IST (Updated: 23 Dec 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்திவரப்பட்ட 50 கிலோ தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.15 கோடி.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்திவரப்பட்ட 50 கிலோ தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.15 கோடி.

ரகசிய தகவல்


மும்பை சர்வதேச விமான நிலையத்தின் கூரியர் முனையத்தில் அதிகளவில் தங்கம் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் கூரியர் முனையத்தில் உள்ள பார்சல்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது, துபாயில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு இரும்பு பொருட்கள் என அனுப்பப்பட்டிருந்த பார்சல்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அந்த பார்சல்களில் மோட்டார் உதிரிபாகங்கள் அதிக எடையுடன் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த உதிரிபாகங்கள் ஒவ்வொன்றையும் கழற்றி பார்த்தனர்.

50 கிலோ தங்க கட்டிகள்

இதில், அந்த உதிரிபாகங்களுக்கு மத்தியில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு தங்க கட்டியும் தலா 2½ கிலோ எடை இருந்தது. இவற்றின் மொத்த எடை 50 கிலோ. அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி. கடந்த 20-ந் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் 33 தங்க கட்டிகளும், டெல்லி விமான நிலையத்தில் 26 கிலோ தங்க கட்டிகளும் சிக்கியது. இந்த 2 சம்பவங்களில் தொடர்புடைய நபர்களுக்கே மும்பையில் பிடிபட்ட தங்கம் கடத்தல் சம்பவத்திலும் தொடர்பு இருக்கும் என அதிகாரிகள் கருதுகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது.

2-வது பெரிய கடத்தல்

மும்பை விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் காலணிகளுக்குள் மறைத்து கடத்திவந்த 40 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 2-வது மிகப்பெரிய சம்பவமாக 50 கிலோ தங்க கட்டிகள் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story