போலி டாக்டர்கள் குறித்து 104 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


போலி டாக்டர்கள் குறித்து 104 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2018 4:15 AM IST (Updated: 1 Jan 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துமனையின் கட்டிடப் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

மதுரை,

மதுரையில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துமனையின் கட்டிடப் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த மார்ச் மாதமே இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறக்கவேண்டும். ஆனால் இதுவரை 70 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் பணியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறேன். தென்மாவட்டத்தில் முதன்முறையாக மதுரை பாலரங்கபுரத்தில் கட்டி முடிக்கபட்ட புற்றுநோய் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

போலி டாக்டர்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலி டாக்டர்கள் குறித்து 104 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டாலும் எளிதில் தப்பிவிடுவதால், அவர்கள் மீது கொலை முயற்சி என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் முழு கட்டுபாட்டிற்குள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story