குப்பையை தரம் பிரிக்காமல் கொண்டு வரும் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம்


குப்பையை தரம் பிரிக்காமல் கொண்டு வரும் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2018 2:08 AM IST (Updated: 1 Jan 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் 100 சதவீதம் குப்பைகள் தரம் பிரிக்க வேண்டும் என்று கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

கோவை,

ம.தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் வே.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வழக்கில் பசுமை தீர்ப்பாயம் ஒரு இடைக்கால தீர்ப்பை பிறப்பித்தது. கோவை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் 100 சதவீதம் குப்பைகள் தரம் பிரிக்க வேண்டும் என்று கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதை ஏற்றுக் கொண்ட கோவை மாநகராட்சி அதற்கான திட்ட அறிக்கையை 23.8.2017 அன்று பசுமைத் தீர்ப்பாயத்தில் அளித்தது. அதில் கோவை மாநகராட்சி முழுவதும் 100 சதவீதம் குப்பை தரம் பிரிக்கும் பணிக்கு நிதி தேவை என்றும், அதற்கான உபகரணங்கள் வாங்கவும் கால அவகாசம் வேண்டும் என்றும் அனைத்தையும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றி டிசம்பர் மாத இறுதியில் 100 சதவீதம் குப்பைகள் தரம் பிரிக்கப்படும் என்றும் கோவை மாநகராட்சி உத்தரவாதம் அளித்தது.

ஆனால் கால அவகாசம் முடியும் நிலையிலும் மாநகராட்சி பணிகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தான் பெரும்பாலும் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. இன்னும் 2 வாரங்களுக்குள் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், தரம் பிரிக்காமல் குப்பைகளை வெள்ளலூர் கிடங்கிற்கு கொண்டு வரும் லாரிகளை சிறைபிடிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story