ஊரக, நகர்ப்புற வார்டு வரைவு மறுவரையறை கலந்தாலோசனை கூட்டம் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில், ஊரக, நகர்புற வார்டு வரைவு மறுவரையறை தொடர்பான கலந்தாலோசனைக்கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் நடந்தது. இதில், அனைத்து அரசியல் கட்சியினர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில், ஊரக மற்றும் நகர்புற வார்டுகளை வரைவு மறுவரையறை மேற்கொண்டது தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:–
தமிழக அரசு உத்தரவின்படி, குமரி மாவட்டத்தில் உள்ள 11 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 111 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 984 கிராம ஊராட்சி வார்டுகள், 897 பேரூராட்சி வார்டுகள் மற்றும் 118 நகராட்சி வார்டுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறையானது, மறுவரையறை அதிகார அலுவலர்களாகிய வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.
வரைவு மறுவரையறை கருத்துருவானது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் பார்வைக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உதவி இயக்குனர் (ஊராட்சி) அலுவலகம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்புடைய பேரூராட்சிகள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தயார் செய்யப்பட்ட வார்டு வரைவு மறுவரையறை மீது கருத்துகள் தெரிவித்தனர். மேலும், வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்கள் மீது தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்க, மறுவரையறை ஆணையத்திடமிருந்து கூடுதல் கால அவகாசம் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கைவைத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், கால அவகாசம் குறித்து மாநில மறுவரையறை ஆணையத்திற்கு உடனடியாக கருத்துரு அனுப்பி வைக்கப்படும் எனவும், தங்களது கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்(பொறுப்பு) சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோமதிநாயகம் (வளர்ச்சி), தாமுவேல் பெரியநாயகம் (தேர்தல்), உதவி இயக்குனர்கள் சையத் சுலைமான் (ஊராட்சி), மாடசாமி சுந்தர்ராஜ் (பேரூராட்சிகள்) மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story