மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்து உள்ளதையடுத்து சேலம் மாவட்டத்தில் அவருடைய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
சேலம்,
சென்னையில் நேற்று ரசிகர்களுடனான சந்திப்பின்போது ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்து அவருடைய ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். சேலம் 2-து அக்ரஹாரத்தில் நடந்த கொண்டாட்டத்திற்கு ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பாரப்பட்டி கனகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுந்தர், ஆடிட்டர் சீனிவாச பெருமாள், ரஜினி செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சரவணன், சதீஷ், மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மெய்யனூர் பகுதியில் நேற்று மாலை இளைய மகாத்மா ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. மேலும், ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.
நற்பணி மன்ற தலைவர் சுக்கம்பட்டி பிரபு தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குமார், வைரவேல், ஆட்டோ தங்கராசு, அரிசிபாளையம் மாரியப்பன், ரமேஷ், கார்த்தி உள்பட ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், ரசிகர்கள் நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆத்தூரில் ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.சுரேஷ் தலைமையில் ஆத்தூர் புதிய பஸ்நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் பட்டாசு வெடித்தனர். இனிப்பு வழங்கி கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் முருகன், பாபு, அன்சர் அலி, சேகர், வெங்கடேஷ், மணி, ரபி அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தலைவாசல் பஸ்நிலையத்தில் தலைவாசல் வட்டார தலைமை ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். வட்டார தலைமை மன்ற ஒன்றிய தலைவர் செந்தில், பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர் பன்னீர்செல்வம், ஆலோசகர் சையத்உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இளம்பிள்ளையில் ரஜினி ரசிகர்கள் திரண்டு இனிப்பு வழங்கினார்கள். பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரியானூர் முக்கோணம் பகுதி, ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையம் அருகில், இளம்பிள்ளை சேலம் ரோடு பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள். சேலம் மாவட்ட தலைவர் பழனிவேலு, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் மேஸ்திரி ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story