திருச்சியில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது
திருச்சியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
திருச்சி,
2017-ம் ஆண்டு முடிந்து இன்று(திங்கட்கிழமை) 2018-ம் ஆண்டு தொடங்கி உள்ளது. ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருச்சி நகரில் மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் பெரிய கடைவீதி, என்.எஸ்.பி. சாலை, தில்லைநகர் மெயின்ரோட்டில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மின் விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. சில நட்சத்திர விடுதிகளில் நேற்று இரவு 10 மணி முதலே இன்னிசை நிகழ்ச்சிகள் தொடங்கின. சரியாக 12 மணி ஆனதும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் முக்கிய பிரமுகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக இளைஞர்கள் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் திருச்சி நகரை வலம் வந்தனர். இரவு நேர கடைகளில் அமர்ந்து அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். கடைவீதியில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி இருந்தது.
இளைஞர்கள் பலர் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் சில பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் 2, 3 இளைஞர்கள் அமர்ந்து கொண்டு “ஹேப்பி நியூ இயர்” என சத்தம் போட்டபடி சாலையில் சென்றனர். சாலையில் நடந்து சென்றவர்களும் பதிலுக்கு புத்தாண்டு வாழ்த்து கோஷம் எழுப்பினர். மது பிரியர்களும் மது அருந்தி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு 10 மணி வரை மதுபாட்டில்கள் வாங்க மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சமூக வலை தளமான முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்றவற்றில் புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்.
புத்தாண்டையொட்டி திருச்சி மேலப்புதூர், புத்தூர் மற்றும் மெயின்கார்டு கேட் ஜோசப் கல்லூரியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று புத்தாண்டை வரவேற்று ஆராதனை பாடல்களை பாடினார்கள். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலையும் புத்தாண்டு பிறப்பு சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வரம்பு மீறி சென்றால் அவர்களை பிடிப்பதற்காக திருச்சி நகரில் முக்கிய இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

Related Tags :
Next Story