ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
x
தினத்தந்தி 1 Jan 2018 4:15 AM IST (Updated: 1 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை தொடந்து நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

நெல்லை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை தொடந்து நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட் ஆகிய பகுதியில் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்தனர். பாளையங்கோட்டை மார்கெட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு துணை தலைவர் தாயப்பன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் துணை செயலாளர் கார்த்திகேயன், தளபதி ராஜ், முருகன், அய்யப்பன், ரியாஸ், மாரியபன், முத்து, முத்துராஜ், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story