ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்


ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2018 9:45 PM GMT (Updated: 2018-01-02T01:25:15+05:30)

ஜி.எஸ்.டி. வரி மற்றும் ஆன்–லைன் வர்த்தகத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்திருந்தது.

திண்டிவனம்,

ஜி.எஸ்.டி. வரி மற்றும் ஆன்–லைன் வர்த்தகத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடைகள் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்திருந்தது.

 அதன்படி திண்டிவனம் நகரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஜி.எஸ்.டி. வரி மற்றும் ஆன்–லைன் வர்த்தகத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், வணிகர்களுக்கு எதிரான விரோத போக்கை மேற்கொள்ளும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தங்களது கடைகள் முன்பு நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story