வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 2 Jan 2018 4:15 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல், இலுப்பூர் போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்குகளில் சிக்கி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நார்த்தாமலை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் வாகனங்கள் போலீஸ் நிலைய வாசலில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகள், லாரிகள், டிராக்டர்கள், சரக்கு ஆட்டோக்கள், பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்டவை போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்படுவது வழக்கம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் உள்ள ஆற்று பகுதிகளில் மணல் அதிக அளவு திருடப்படுகிறது. இதற்காக வருவாய் கோட்டாட்சியர் முதல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் வரை எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அணி வகுப்பு

இவ்வாறாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மேல் நடவடிக்கைக்காக அந்தந்த பகுதிகளின் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. அப்படி ஒப்படைக்கப்படும் வாகனங்கள் போலீஸ் நிலையத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அந்த வாகனங்களை உரிய அபராத தொகையை கட்டி ஒரு சில நாட்களில் எடுத்து சென்று விடுகின்றனர். ஆனால் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை எடுத்துச் செல்ல ஆர்வம் காட்டாமல் அதன் உரிமையாளர்கள் நாட்களை கடத்துகின்றனர். இதனால் அன்னவாசல், இலுப்பூர் போலீஸ் நிலையங்களில் இது போன்ற வழக்குகளில் சிக்கியுள்ள வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. எனவே உரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story