பறக்க முடியாமல் தவித்த அபூர்வ வகை கழுகு மீட்பு


பறக்க முடியாமல் தவித்த அபூர்வ வகை கழுகு மீட்பு
x
தினத்தந்தி 2 Jan 2018 4:00 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பறக்க முடியாமல் தவித்த அபூர்வ வகை கழுகு மீட்பு

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகே ஒரு கழுகு கீழே விழுந்து பறக்க முடியாமல் தவிப்பதாக மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதனுக்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து கழுகை மீட்கும்படி விலங்குகள் மீட்புக்குழுவுக்கு அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று கழுகை மீட்டனர். பின்னர் அந்த கழுகை பரிசோதித்து பார்த்ததில் அது யுரேசியா நாட்டைச் சேர்ந்த அபூர்வ வகை கழுகு என்பதும், உணவு இல்லாமல் பரிதவித்ததால் அது கீழே விழுந்து பறக்க முடியாமல் இருந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கழுகை உதயகிரி பூங்காவில் விட்டனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘இந்த வகை கழுகுகள் யுரேசியா, நேபாளம், திபெத், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிக்கின்றன.இது பிணந்தின்னி வகையை சேர்ந்தது. மீட்கப்பட்ட கழுகு சுமார் 15 கிலோ எடை இருந்தது. இந்த வகை கழுகு முதல் முறையாக குமரி மாவட்டம் வந்திருப்பது அபூர்வமானது. உலகளவில் இப்பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன’ என்றனர்.

Next Story