காமராஜர் ஆட்சியை நடிகர் ரஜினிகாந்த் கொடுப்பார் தமிழருவிமணியன் பேட்டி


காமராஜர் ஆட்சியை நடிகர் ரஜினிகாந்த் கொடுப்பார் தமிழருவிமணியன் பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2018 4:30 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த், காமராஜர் ஆட்சியை கொடுப்பார் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் கூறினார்.

சோளிங்கர்,

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர், வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் ரவி வீட்டிற்கு சென்று, ரசிகர்களுடன் ஆலோசணை நடத்தினார். அப்போது தமிழருவிமணியன், எல்லா இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரஜினி ரசிகரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு ஆலோசனைகளை கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திறமையான, தகுதிமிக்க, நல்லொழுக்கமுள்ளவர்களை பொறுப்பில் அமர்த்தி அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் கண்காணிப்பாளனாக நான் இருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியதுபோல் வேறு யாராவது கூறியுள்ளார்களா? ஜெயலலிதா இருந்த வரையில் வாயே திறக்காத அமைச்சர்கள் இன்று திசைகள் தோறும் திருவாய் திறக்கிறார்கள்.

3 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று தினகரன் கூறிவருகிறார். எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வினர் அனைவருக்கும் என்ன லட்சியம் உள்ளது?. அவர்களுடைய நோக்கம் ஒன்றுதான் எப்படியாவது பதவிக்கு வரவேண்டும்.

பெற்ற பதவியை வைத்து பணம் சேர்ப்பது, பணத்தை வைத்து தேர்தலில் பணம் கொடுத்து மீண்டும் பதவியை பெறுவது மட்டுமே இவர்களின் நோக்கம். நடிகர் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுப்பட்ட ஆன்மிக அரசியலையும், காமராஜர் ஆட்சியையும் கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story