ராட்டினம் அறுந்து விழுந்து 8 பேர் காயம் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பொட்டல்புதூர் கந்தூரி விழாவில் ராட்டினம் அறுந்து விழுந்ததில் 8 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையம்,
நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா 10 நாட்கள் நடந்தது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ராட்டினங்களில் இரவு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆடி மகிழ்ந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ஒரு ராட்டினம் திடீரென்று அறுந்து விழுந்தது. ராட்டினத்தில் இருந்தவர்கள் திடீரென்று தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அபய குரல் எழுப்பியபடி ஆங்காங்கே விழுந்தனர்.
இதில் பொட்டல்புதூர் சேக் இப்ராகிம்(வயது 25), ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரிஸ்மா(19), முஸ்லிம் தெருவை சேர்ந்த அஸ்மா(13), பாளையங்கோட்டை ஜெய்லானி தெருவை சேர்ந்த ஆப்ரின்(10), முகமது வாசிம்(15), பேட்டையை சேர்ந்த சேக் முகம்மது(15), ஷபிர்(13), சொக்கம்பட்டி காயிதே மில்லத் தெருவை சேர்ந்த பாரத் சுபவாஹினி(24) ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் விபத்து ஏற்பட காரணமான ராட்டினத்தை பராமரிக்காமல் விட்டதாக மோகன்(45), சிவன் மூர்த்தி(25), முத்தையா(50) ஆகிய 3 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story