புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளை; பஸ்கள் கண்ணாடி உடைப்பு 4 பேர் கைது
போச்சம்பள்ளி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளையில் ஈடுபட்டு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இளைஞர்கள் சிலர் மது குடித்து ஆட்டம் போட்டனர். அப்போது மது போதையில் ரகளையிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து திருவண்ணா மலைக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. போச்சம்பள்ளி அருகே உள்ள போயார்கொட்டாய் என்ற இடத்தில் வந்தபோது அங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் பஸ் மீது கற்களை எறிந்தனர்.
4 பேர் கைது
இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், பஸ்சில் கற்களை எறிந்தது அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24), மாதேஸ்வரன் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
இதே போல மத்தூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு சென்ற அரசு பஸ் மீது களர்பதி பகுதியில் வந்த போது வாலிபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஓம்சக்தி (29) என்பவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story