சிவகங்கையில் இருவேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


சிவகங்கையில் இருவேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Jan 2018 2:30 AM IST (Updated: 3 Jan 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் இருவேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை, தலைவர் சின்னச்சாமி தெருவை சேர்ந்தவர் சர்வேசுவரன். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகன் ஜீவா(வயது 17). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜீவா சரிவர படிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் சரியாக படிக்கவில்லை என்று திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ஜீவா, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக இறந்துபோனார்.

இதேபோன்று சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சக்கையன். இவருடைய மனைவி சகாயராணி(30). கண்வன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பப்பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சகாயராணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராணி இறந்துபோனார்.

இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story