கிருஷ்ணகிரியில் டாக்டர்கள் வேலைநிறுத்தம்
தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து காலை 10 மணி முதல் 11 மணி வரை மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.
தனியார் மருத்துவமனைகள்
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்க செயலாளர் கைலாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதேபோல தனியார் மருத்துவமனைகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story