முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணி புரிந்த மருத்துவர்கள்
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விக்கிரவாண்டி,
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரும்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதேபோல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களும் கருப்பு பட்டை அணிந்து பணி புரிந்தனர்.