பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தகட்டூரில் விவசாயிகள் 8-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயக்காரன்புலத்தில் 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
வாய்மேடு,
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று 8-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு வரம்பியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணன், முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் வீரமணிகண்டன், விவசாயிகள் ராஜேந்திரன், திருவேங்கடம், வைத்தீஸ்வரன், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி கூட்டுறவு சங்கத்தின் முன்பு ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் மருதூர் தெற்கு கூட்டுறவு சங்கம் முன்பு பஞ்சநதிக்குளம் கிழக்கு, மருதூர் தெற்கு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு வட்டார விவசாயிகள் சங்க செயலாளர் ஒளிச்சந்திரன் தலைமை தாங்கினர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Tags :
Next Story