பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
கீழ்வேளூர் அருகே செம்பியன்மகாதேவியில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழ்வேளூர்,
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த செம்பியன்மகாதேவி கடைத்தெருவில் வடுகச்சேரி - வேளாங்கண்ணி சாலையில் மகாதானம், வடுகச்சேரி, ஆலங்குடி, செம்பியன்மகாதேவி, வண்டலூர் ஆகிய பகுதிகளைசேர்ந்த விவசாயிகள் 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் தலைமை தாங்கினார். இதில், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், நாகை தாசில்தார் ராகவன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த 2016-2017-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக சம்பா பயிர்கள் முற்றிலும் கருகி பாதிக்கப்பட்டன.
இதைதொடர்ந்து பயிர்க் காப்பீடு செய்த அனைவருக்கும் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மேற்கண்ட பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.
தற்போது பல்வேறு இடங்களில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்குவதில் குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையாக கணக்கெடுத்து உரிய பயிர்க்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு வருகிற 20-ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story