தஞ்சையில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி கவர்னர் தொடங்கி வைத்தார்
தஞ்சையில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் பயணமாக தஞ்சைக்கு வந்தார். 2-வது நாளான நேற்று தஞ்சை குழந்தையம்மாள் நகருக்கு கவர்னர் பன்வாரிலால்புரோகித் சென்றார். அங்கு மாநகராட்சி சார்பில் வைத்திருந்த மக்கும் குப்பை தொட்டி, மக்காத குப்பை தொட்டிகளை பார்வையிட்ட அவர், அந்த நகரில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று தூய்மை இந்தியா திட்ட பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வீடுகளில் இருந்த பொதுமக்களிடம் தினமும் மாநகராட்சி ஊழியர்கள் வந்து குப்பைகளை பெற்று செல்கிறார்களா? மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை என தரம் பிரித்து தானே ஊழியர்களிடம் கொடுக்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
அதற்கு அதே பகுதியில் வசிக்கும் டாக்டர் ஒருவர், மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுப்பதாகவும், எங்கள் பகுதியை எப்போதும் நாங்கள் சுத்தமாக வைத்து இருப்பதுடன் ஒரு குழு அமைத்து வாரம் ஒரு முறை கூட்டம் நடத்துவதாகவும், பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராவை நாங்கள் எங்கள் பகுதியில் பொருத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இதை கேட்ட கவர்னர், வீட்டை எப்படி சுத்தமாக வைத்து இருக்கிறீர்களோ, அதேபோல வீதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு அதிகாரிகள், கவர்னரிடம் கையுறைகளை கொடுத்தார். அதனை கவர்னர் தனது கைகளில் மாட்டிக்கொண்டு பஸ் நிலைய வளாகத்தில் கிடந்த குப்பைகளை சேகரித்து குப்பை தொட்டியில் போட்டார். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துடைப்பத்தை எடுத்து பஸ் நிலைய வளாகத்தை சுத்தம் செய்தார்.
மேலும் அவர், பொதுமக்கள், கடை ஊழியர்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கினார். அதில், கழிப்பறையை பயன்படுத்துவது ஆரோக்கியமானது. திறந்தவெளியில் மலம் கழித்தல் உடல் நலத்திற்கு கேடு. கைவிடுவோம் பாலிதீன் பையை. கையில் எடுப்போம் துணிப்பையை போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
தொடர்ந்து பொதுமக்களிடம் பிளாஸ்டிக் கேடு விளைவிப்பதால் பிளாஸ்டிக் பைகளை பயன்படு்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். தனிநபர் கழிப்பறை கட்டி பயன்படுத்த வேண்டும் என்று உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
இதையடுத்து தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் துரைக்கண்ணு, கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ் மற்றும் அதிகாரிகள், தொண்டு நிறுவனத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், நேருயுவகேந்திரா அமைப்பினர், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். அதேபோல தூய்மை இந்தியா திட்ட வாகன விழிப்புணர்வு பேரணியையும் கவர்னர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர், தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தை பற்றிய தொகுப்பு வீடியோ ஒளிபரப்பப்பட்டு, அது குறித்து கலெக்டர் அண்ணாதுரை விளக்கம் அளித்தார். நேற்றுகாலை தஞ்சை பெரியகோவிலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே நினைவுபரிசு வழங்கினார். கோவில் வருகை பதிவேட்டில் கவர்னர் கையெழுத்திட்டார்.
பின்னர் கவர்னர் தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சரசுவதிமகாலுக்கு கவர்னர் சென்றார். அங்கு அவர், ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், ஆங்கிலேயேர் காலத்தில் இருந்த பழைய இந்திய வரைபடத்தையும், பழங்கால பொருட்களையும் பார்வையிட்டார்.

Related Tags :
Next Story