திருவல்லிக்கேணி போலீஸ் குடியிருப்பில் துணிகரம் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை திருட்டு


திருவல்லிக்கேணி போலீஸ் குடியிருப்பில் துணிகரம் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 4 Jan 2018 3:00 AM IST (Updated: 4 Jan 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

திருவல்லிக்கேணி போலீஸ் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு வீட்டில் புகுந்து நகை பணத்தை மர்ம மனிதர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

சென்னை, 

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ஸ்டாலின் ஜோஸ். போலீஸ் ஏட்டான இவர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றுகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.

அப்போது அவரது வீட்டில் கள்ளச்சாவி மூலம் கதவை திறந்து, யாரோ மர்ம மனிதர்கள் புகுந்து இருப்பது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், மற்றும் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது. அவரது மனைவியின் கல்வி சான்றிதழ்களையும் மர்ம மனிதர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

காரணம் என்ன?

கல்வி சான்றிதழை திருடிச் சென்றதால் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களின் நோக்கத்தில் வேறு காரணம் ஏதும் இருக்குமோ? என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story