வார்டுகள் மறுவரையறை குறித்த ஆட்சேபனை மனுக்களை நாளை வரை கொடுக்கலாம்
உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டுகள் மறுவரையறை குறித்த ஆட்சேபனை மனுக்களை நாளை (வெள்ளிக்கிழமை) வரை கொடுக்கலாம் என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் நகராட்சி அலுவலகத்தில் வார்டுகள் மறுவரையறை தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து பெறப்பட்ட மனுக்களை கலெக்டர் கோவிந்தராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள வார்டுகள் பூலோக அடிப்படையில் மறுவரையறை செய்திட கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் 30-ந்தேதி முதல் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த டிசம்பர் 27-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
இந்த மறுவரையறை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டம் கடந்த 28-ந்தேதி அன்று நடத்தப்பட்டு கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் கேட்கப்பட்டன. மேலும் பொதுமக்கள், தங்கள் கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் தெரிவிப்பதற்காக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட வரைபடம் வைக்கப்பட்டுள்ளது. வார்டுகள் மறுவரையறை குறித்து கடந்த மாதம் 27-ந்தேதி முதல் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
கரூர் நகராட்சி அலுவலகத்தில் மறுவரையறை குறித்து பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய அளவிலான வரைபடம் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிட்ட பொதுமக்களில் நேற்று வரை 19 பேர் ஆட்சேபனை மனுக்கள் அளித்துள்ளனர்.
இதே போல் குளித்தலை நகராட்சியில் 4 ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பேரூராட்சி வார்டுகளில் 3 மனுக்களும், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் 62 பேர்களும் ஆட்சேபனை தெரிவித்து மனுக்கள் அளித்துள்ளனர். மேலும் வார்டுகள் மறுவரையறை குறித்து கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மனுக்கள் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வார்டுகள் மறுவரையறை வரைபடத்தை கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டார். அப்போது உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், தாசில்தார் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story