பயிர்க்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்காவிட்டால் போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
பொங்கல் பண்டிகைக்கு முன்பு பயிர்க்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஜினி, தினகரன் வரவால் தமிழக அரசியல் களம் மாறி விட்டது. பா.ஜனதா தமிழகத்தில் வேரூன்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி தேர்தலில் கிராமம் தோறும் பா.ஜனதா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைக்க போவதாக ரஜினி கூறியதால் அவருக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால் அவரோடு பா.ஜனதா மறைமுக கூட்டணி என்று கூறுவதில் அர்த்தமில்லை. கருணாநிதியை, ரஜினி சந்திப்பது ஆரோக்கியமான அரசியல் ஆகும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் சிலை கடத்தல்கள் அதிகமாக நடைபெற்றிருக்கின்றன. ஒரு கோவிலில் உள்ள சிலை தங்கம் இல்லை என அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர்.
தமிழக விவசாயிகளுக்கான பயிர்க்காப்பீட்டுத்தொகையை மத்திய அரசு முழுமையாக ஒதுக்கீடு செய்துவிட்டது. ஆனால் அந்த தொகையை மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கவில்லை. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பயிர்க்காப்பீட்டுத்தொகையை வழங்காவிட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம். தஞ்சையை நவீன நகராக மாற்ற மத்திய அரசு ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த தொகை முழுமையாக செலவு செய்யப்படவில்லை.
தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கவர்னர் ஆய்வு செய்வதில் தவறு இல்லை. கவர்னர் தமிழகத்துக்கு உறுதுணையாக இருக்கிறார். அவரால் தமிழகத்துக்கு நஷ்டம் கிடையாது. மக்கள் பிரச்சினையை திசை திருப்புவதற்காக கவர்னர் ஆய்வு செய்வது குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை. இதற்காக கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டுவது நாகரீகமானது அல்ல. மருத்துவத்துறையில் ஊழலை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததால், அதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. வேதரெத்தினம், மாவட்ட தலைவர் சிவா, ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக தமிழிசை சவுந்தரராஜனுக்கு முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

Related Tags :
Next Story