சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்


சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2018 4:00 AM IST (Updated: 4 Jan 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி,

தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் நேற்று காலை ராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சம்மேளன மாவட்ட தலைவர் வீரமுத்து தலைமை தாங்கினார். பொது செயலாளர் சந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கால் டாக்சிகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். சிறு, சிறு காரணங்களை கூறி ஓட்டுனர் உரிமத்தை பறிப்பதை கைவிட வேண்டும். சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு இன்னல்கள் கொடுக்கும் பல உத்தரவுகளை அரசு திரும்ப பெற வேண்டும். சிறிய சரக்கு வாகனம், கார் உள்பட அனைத்து வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

Next Story