தம்பதி வெட்டிக்கொலை மர்ம ஆசாமிகள் வெறிச்செயல்
இரவு நேரத்தில் தம்பதியை அரிவாளால் பயங்கரமாக வெட்டிக்கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வீரணம்பாளையம் ஊராட்சி சூலக்கல்புதூர் நீலக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 60). விவசாயி. இவருடைய மனைவி கண்ணம்மாள்(55). இவர்களின் மகன் பெரியசாமி, மகள் ஜோதிலட்சுமி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி காங்கேயத்தில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இயற்கையின் மீது அதிக ஆர்வம் கொண்ட பழனிசாமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீலக்காட்டு தோட்டத்தை விலைக்கு வாங்கினார். இங்கு ஒரு பகுதியில் ரோஜா செடிகளை பயிரிட்டு விவசாயம் செய்துவந்தார். மேலும் பல்வேறு வகையான பழ வகை மரங்களை வளர்த்து வந்தார். ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் இந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் பழனிசாமியும், அவருடைய மனைவியும் மட்டுமே வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பழனிசாமியின் வீட்டுக்கு பால் கொடுக்க, நேற்று காலை பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் விவசாயி சிதம்பரம் சென்றார். அப்போது, வீட்டின் முன் பழனிசாமியும், அவருடைய மனைவி கண்ணம்மாளும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக்கிடந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிதம்பரம், இதுபற்றி பழனிசாமியின் மகனுக்கும், காங்கேயம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், நேற்று முன்தினம் காங்கேயத்துக்கு சென்ற பழனிசாமி, மாலை 6.30 மணிக்கு மேல் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, இரவு 9.30 மணி அளவில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்ற தனது மகனுடன் செல்போனில் பேசி, அவரிடம் நலம் விசாரித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வெளியே கட்டிலில் உட்கார்ந்து அவர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்குவந்த மர்ம ஆசாமிகள், பழனிசாமியை அரிவாளால் கழுத்தில் வெட்டியதும், அவர் எழுந்து தப்பி ஓடவே அவர்கள், மேலும் 2 வெட்டு வெட்டியதும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக இறந்ததும் தெரியவந்தது. மேலும் தனது கணவரின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிவந்த கண்ணம்மாளையும் அந்த மர்ம ஆசாமிகள் அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானதும் தெரியவந்தது.
அத்துடன் பழனிசாமியின் வீட்டில் இரவு சமைத்து வைத்திருந்த உணவு அப்படியே இருந்துள்ளது. இதனால் இரவு 10 மணிக்கு மேல் தான் கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பழனிசாமியின் வீட்டில் இருந்த நகைகள், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. பழனிசாமி விவசாயத்துடன், பணம் வட்டிக்கு கொடுப்பது, ஏலச்சீட்டு நடத்துவது போன்ற தொழிலும் செய்து வந்துள்ளார்.
எனவே முன்விரோதம் காரணமாகவோ அல்லது வேறு காரணமாகவோ கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். காங்கேயம் அருகே நள்ளிரவில் தம்பதியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story