பள்ளி, கல்லூரி மாணவ–மாணவியர் கல்வி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில் கோரிக்கை
பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் கல்வி சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும், என ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் கல்வி சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும், என ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கலந்துரையாடல்தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது திறமைகள், தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளை வளர்க்கும் வகையில் “காபி வித் கலெக்டர்“ என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர்(பயிற்சி) சரவணன், துணை ஆட்சியர்(பயிற்சி) லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:–
தன்னம்பிக்கைநாட்டின் வளர்ச்சியில் மாணவ, மாணவிகளின் பங்கு மிக முக்கியமானது ஆகும். அவர்கள் வாழும் அல்லது வசிக்கும் பகுதிகளில் உள்ள அன்றாட பிரச்சினைகள், அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் எவ்வாறு எதிர் கொள்வது என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுவாக தங்களது பகுதிகளில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தெரியும். அந்த தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது என்பதும் தெரியும். ஆனால் அவற்றை பெறுவதில் உள்ள சிரமங்கள், எந்தெந்த குறைகளுக்கு எந்த துறை அலுவலர்களை, எவ்வாறு சந்திப்பது அல்லது எவ்வாறு அது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வது போன்ற சந்தேகங்களை இந்த நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளலாம். அதே போன்று இந்த நிகழ்ச்சியின் மூலம், மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு ஆலோசனைகள், கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தெளிவாக சிந்திக்க வேண்டும்தூத்துக்குடி மாவட்டத்தில் பருமழையின் போது கிடைக்கப்பெறும் தண்ணீரை சேகரிப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் தங்களது எதிர்கால வாழ்க்கையை தேர்ந்தெடுக்க, தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்திய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளை மேற்கொள்ள மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளையும், அறிவாற்றலையும், வாசிக்கும் பழக்கத்தையும் அதிகரிப்பதோடு, தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மைகளை அறவே நீக்கி, உங்களது தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி சுற்றுலாநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகள் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் அடிப்படை வசதிகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களுக்கு வசதியாக ஆன்–லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி, அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்றுவர ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
ஆந்திர, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும் அறிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். இயற்கை விவசாய முறையை நமது மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டும். பசுமையான மாவட்டமாக மாற்றிடும் வகையில் அதிக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மழைநீர் சேமிப்பு, இயற்கை விவசாயம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்’ என்று கூறினர்.
நிகழ்ச்சியில் திரளான மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.