ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்


ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2018 4:00 AM IST (Updated: 5 Jan 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்க தர்ணா போராட்டம் நேற்று காலை திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற கிராம வருவாய் உதவியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.500 போனஸ் வழங்குவதைப்போல், ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். 8-வது ஊதியக்குழு அடிப்படையில் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் அங்கப்பன் பேசினார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் கருணாநிதி, அனைத்துத்துறை ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம், மாநில பொதுச்செயலாளர் மாயமணி ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் சுசீலா நன்றி கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்டனர். 

Next Story