ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
செக்கானூரணி,
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட போலியம்பட்டி கிராமத்தின் வழியாக ரெயில்வே டிராக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து விட்டதால் போலியம்பட்டி கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் அந்த கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து அவர்கள் பலமுறை செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் அங்குள்ள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்தநிலையில் நேற்று போலியம்பட்டி கிராம பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story