கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2018 4:15 AM IST (Updated: 5 Jan 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

திண்டுக்கல்,

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி மற்றும் சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த தர்ணா போராட்டத்தின் போது ஓய்வூதியத்தொகையை ஒவ்வொரு மாதமும் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். அனைத்து அரசு ஓய்வூதியர் களை போன்று குடும்ப ஓய்வூதியம், மருத்துவக்காப்பீடு, பொங்கல் போனஸ், மருத்துவபடி, இலவச பஸ் பயண அட்டை போன்றவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். 

Next Story