நாசரேத்தில் பரிதாபம் கல்லூரி மாணவி மாயமான வேதனையில் தாய் தற்கொலை
நாசரேத்தில் கல்லூரி மாணவி மாயமான வேதனையில் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
நாசரேத்,
நாசரேத்தில் கல்லூரி மாணவி மாயமான வேதனையில் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி மாயம்தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வாழையடியைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 53). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஞானசெல்வி (48). இவர்களுக்கு சுரேகா (19) என்ற மகளும், சூசைராஜ் என்ற மகனும் உள்ளனர். சுரேகா, நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். சூசைராஜ் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் சுரேகா கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் விசாரித்து வந்தனர்.
தாய் தற்கொலைமகள் மாயமானதால், ஞானசெல்வி மன வேதனையில் இருந்தார். நேற்று காலையில் சூசைராஜ் தன்னுடைய சகோதரியை தேடி பார்ப்பதற்காக வெளியில் சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஞானசெல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த சூசைராஜ் தன்னுடைய தாயார் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாசரேத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்த ஞானசெல்வியின் சொந்த ஊர் சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் ஆகும். மகள், மகனின் படிப்புக்காக கடந்த சில ஆண்டுகளாக நாசரேத்தில் வசித்து வந்தனர். இவருடைய மற்றொரு மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.