கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடின பயணிகள் கடும் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடியதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
கிருஷ்ணகிரி,
ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 4-ந் தேதி இரவு முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பஸ்கள் ஓடவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் பஸ்கள் ஓடவில்லை. நேற்று முன்தினம் 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. 10 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடியது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். நேற்று 50 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடியது. 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பணிமனைகள் உள்ளன. இதில் 410 பஸ்கள் இயங்கி வருகின்றன. அதில் புறநகரில் 229 பஸ்களும், 181 டவுன் பஸ்களும் ஓடுகின்றன. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 82 பஸ்கள் மட்டுமே ஓடியது. நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 221 பஸ்கள் ஓடின.
கிருஷ்ணகிரியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் மூன்று, மூன்று பஸ்களாக போலீஸ் பாதுகாப்புடன் அடுத்த மாவட்ட மற்றும் மாநில எல்லை வரையில் இயக்கப்பட்டன. இதே போல உரிமம் இல்லாத பல தனியார் பஸ்களும் கடந்த 2 நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.
கடந்த 2 நாட்களாக பஸ்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதின் காரணமாக பஸ்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. வெளியூர் பயணத்தை பெரும்பாலான பயணிகள் தவிர்த்தனர். தற்காலிகமாக நியமிக்கப்பட்ட டிரைவர்கள் பஸ்களை இயக்கினார்கள். அதே போல நடத்துனர்கள் மஞ்சள் பையிலும், பிளாஸ்டிக் கவரிலும் பணத்தை வாங்கி போட்டு, டிக்கெட் கொடுத்ததை பார்க்க முடிந்தது.ஓசூர் பணிமனையில் இருந்து 73 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்று 46 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. அதே போல புறநகர் பஸ்கள் 60 இயக்கப்பட்டு வருகின்றன. அதில் நேற்று 40 பஸ்கள் இயக்கப்பட்டன. ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அதே நேரத்தில் ஓசூரை சுற்றி பல கிராமங்களுக்கு நேற்று பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related Tags :
Next Story