போக்குவரத்து தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்: குறைந்த அளவிலேயே பஸ்கள் ஓடின
சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நடந்த வேலை நிறுத்தத்தால், குறைந்த அளவிலேயே பஸ்கள் இயங்கியதால் வெளியூர் பயணத்தை பயணிகள் தவிர்த்தனர்.
சேலம்,
அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரசு நடத்திய பேச்சுவார்த்தை முடிவை ஏற்க போக்குவரத்து தொழிலாளர்கள் மறுத்து விட்டனர். அதாவது தி.மு.க. தொழிற்சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் அதை ஏற்க மறுத்து, பஸ்களை இயக்காமல் போராட்டத்தை நடத்தி வருகின்றன. சேலம் மாவட்டத்திலும் பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாகவும் நீடித்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 13 பணிமனைகளில் இருந்தும் 800-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது பயணத்தை தவிர்த்தனர். இதனால், பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்தது. அதே வேளையில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டாலும் பஸ்களில் கூட்டம் இல்லை. சில அரசு பஸ்கள், பணிமனையில் இருந்து கொண்டு வரப்பட்டு புதிய பஸ் நிலையத்தில் நீண்டநேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சில பஸ்கள் குறைந்த பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அரசு விரைவு பஸ்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக, பெரும்பாலான பயணிகள் அதில் ஏறி பயணிப்பதற்கும் அச்சப்பட்டனர். பஸ் நிலையத்தில் நின்ற தனியார் பஸ்களிலேயே பயணிக்க அதிக ஆர்வம் காட்டினர்.
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே அரசு பஸ்களை இயக்கினர். மேலும் லாரி, கனரக வாகன டிரைவர்களை தற்காலிக டிரைவர்களாக தினக்கூலி அடிப்படையில் போக்குவரத்து கழக அதிகாரிகள் நியமித்தும் பஸ்களை இயக்க செய்தனர்.
சேலம் மாநகரில் அரசு டவுன் பஸ்கள் வழக்கம்போல இயங்கின. அதே வேளையில் புறநகர் பகுதி மற்றும் மலைப்பகுதிக்கு பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், கிராமப்புறங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்கள் இன்றி தவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில், 75 சதவீதத்திற்கும் மேலான பஸ்கள் இயக்கப்படவில்லை என்றும், பணிமனையில் நின்றிருந்த பஸ்களை பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு ஓடியதாக கணக்கு காட்டப்பட்டதாகவும், கோவை செல்லக்கூடிய பஸ்சை ஈரோடு வரை இயக்கிவிட்டு கோவை சென்றதாகவும் அதிகாரிகள் பொய் கணக்கு காட்டுவதாக குற்றஞ்சாட்டினர்.
எனவே, போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பயணிகள் தரப்பு எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Tags :
Next Story