இளம்பெண் மர்மசாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமனார் கைது
சேலத்தில் இளம்பெண் மர்மசாவு விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர்-மாமனார் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டை ஏ.வி.அய்யர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). இவருடைய மனைவி மோனிகா (20). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் மோனிகா தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெங்கடேசின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் மோனிகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், இதன் காரணமாக உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்டதாவும் மோனிகாவின் தந்தை ரவி மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின் மோனிகாவின் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்களிடம் சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அன்பு ஆகியோர் விசாரணை நடத்தினர். திருமணம் ஆகி 2 ஆண்டுகளில் அவர் இறந்ததால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது தொடர்பாகவும் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில், சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் அன்பு உத்தரவின்பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில், மோனிகாவை தற்கொலைக்கு தூண்டியது உறுதி செய்யப்பட்டது. வரதட்சணை கேட்டு தொடர்ந்து சித்ரவதை செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து மோனிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் வெங்கடேஷ், மாமனார் பிரகாஷ் ஆகியோர் மீது செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story