கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
திருமானூர் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள சுள்ளங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் மாரியப்பன்(வயது 32). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த வினோதாவுக்கும்(21) 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சில மாதங்கள் கழித்து மாரியப்பன் வெளிநாட்டில் வேலைக்காக சென்றுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வினோதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து வெளிநாட்டில் இருந்து மாரியப்பன் தனது குழந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊரான சுள்ளங்குடிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியூர் சென்றிருந்த மாரியப்பனின் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் மாரியப்பனும், வினோதாவும் ஒரே புடவையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியப்பனின் பெற்றோர் கதறி அழுதனர். கணவன்-மனைவி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்த இடத்தின் அருகே குழந்தை இருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாரியப்பன், வினோதா உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரியப்பன், வினோதாவிற்கு திருமணமாகி 1½ ஆண்டு மட்டுமே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் மோகன்ராஜன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story