ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம்
ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. போராட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உச்சவரம்பின்றி ஒரு மாத ஊதியத்தை போனசாக அனைவருக்கும் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ரோட்டில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினார்கள். மதியம் 1 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story