வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க 40 நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தம் போலீஸ் அதிகாரி தகவல்

வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க 40 நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தம் போலீஸ் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:30 AM IST (Updated: 7 Jan 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறை மீறி வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க பல்வேறு இடங்களில் 40 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் இணை கமி‌ஷனர் அமிதேஷ் குமார் கூறினார்.

மும்பை,

விதிமுறை மீறி வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க பல்வேறு இடங்களில் 40 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் இணை கமி‌ஷனர் அமிதேஷ் குமார் கூறினார்.

நவீன கண்காணிப்பு கேமரா

மும்பையில் வாகனங்கள் விதிமுறை மீறி வேகமாக செல்வதால் விபத்துகள் நடக்கின்றன. விதிமுறைபடி அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் நள்ளிரவு நேரங்களில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சாலைகளில் பறக்கின்றன. இவ்வாறு விதிமுறை மீறி வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க நகரின் பல்வேறு பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

இதுகுறித்து மும்பை போக்குவரத்து பிரிவு போலீஸ் இணை கமி‌ஷனர் அமிதேஷ் குமார் கூறியதாவது:–

வாகன ஓட்டிகள் செல்லும் வேகத்தை கணக்கிடும் திறன் பெற்ற அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் முதலில் பாந்திரா – ஒர்லி கடல்வழி பாலத்தில் பொருத்தப்பட்டன. அதில் நல்ல பலன் கிடைத்தது. தற்போது 40 கண்காணிப்பு கேமராக்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விதிமுறை மீறி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் செலுத்துவதற்கான இ–செல்லான் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story