நோட்டா! அரசியல் கட்சிகளுக்கான அபாய மணி!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட பா.ஜனதா குறைந்த வாக்குகள் பெற்றது தேசிய அளவில் சமூகவலைதளங்களில் டிரென்டிங் ஆனது. ‘மேல் இருக்கும் யாருக்கும் இல்லை’ என்பதன் சுருக்கம் தான், நோட்டா.
அதாவது, தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை காட்டுவதற்காக மக்கள் இந்த நோட்டாவுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் பா.ஜனதா மட்டுமின்றி பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அவர்களுடன் கூட்டணியில் இருந்தவர்கள் என எல்லா அரசியல் கட்சியினர் மீதும் குத்தப்பட்ட கரும்புள்ளிகளின் தொகுப்பாகத்தான் பார்க்க வேண்டும். 2013-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி வாக்குப்பதிவில் நோட்டாவை அறிமுகம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே ஆண்டு நவம்பர் 11 முதல் டிசம்பர் 4-ந்தேதி வரை நடந்த டெல்லி, சத்தீஸ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நோட்டா முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 60 லட்சத்து 3 ஆயிரத்து 42 நோட்டா வாக்குகள் பதிவாகி இருந்தன. இதை அரசியல் கட்சியினர் எளிதாக கடந்து சென்று விட முடியாது. காங்கிரஸ், பா.ஜனதா என்ற இருபெரும் தேசிய கட்சிகள், கம்யூனிஸ்டுகள், இதுதவிர மாநில கட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறிய கட்சிகளை நாடு முழுவதும் 60 லட்சம் மக்கள் புறக்கணித்து உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களிலும் சிறிய கட்சிகளை காட்டிலும் நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன. இது அரசியல் கட்சியினர் மீது வாக்காளர்கள் நம்பிக்கை இழந்து வருவதைத்தான் காட்டுகிறது. நோட்டா அரசியல் கட்சியினரை எச்சரிக்கும் அபாய மணி. அரசியல் கட்சியினர் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டிய நேரம் இது. நீங்கள் உங்கள் தவறுகளை திருத்தி ஊழலற்ற, சாதி, சமய சார்பற்ற மக்கள் நல அரசியலை முன் எடுத்து செல்லுங்கள். இல்லையெனில் எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் நீங்கள் நோட்டாவிடம் தோற்றுப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
-கோகம்

Related Tags :
Next Story