மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 9 இடங்களில் சிறப்பு பயிற்சி மையங்கள்
பிளஸ்–2 மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் குமரி மாவட்டத்தில் 9 இடங்களில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார்.
களியக்காவிளை,
கடந்த 2016–2017 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கான பாராட்டு விழா களியக்காவிளையில் நடந்தது. விழாவுக்கு பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜகோபால் சுன்கர தலைமை தாங்கினார். குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர் லட்சுமணசுவாமி வரவேற்று பேசினார். அருட்பணியாளர் மரிய ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மரிய தங்கம் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
பிளஸ்–2 மாணவ–மாணவிகள் நீட் உள்பட போட்டி தேர்வுகளை தேசிய அளவில் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. மாணவர்களை தயார் படுத்தும் நிலையில் அரசு சார்பில் போட்டித்தேர்வு மையங்கள் தொடங்க படுகிறது.
இதற்காக குமரி மாவட்டத்தில் 9 இடங்களில் போட்டித்தேர்வு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தில் எல்.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 3 மையங்களில் வகுப்புகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. மீதமுள்ள மையங்களில் வகுப்புகள் விரைவில் தொடங்கும்.
இந்த மையங்களில் பயிற்சி பெறும் மாணவ–மாணவிகளுக்கு பேட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில், மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுபானந்தராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story