திருச்சியில் 4-வது நாளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
திருச்சியில் 4-வது நாளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். இதனால் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருச்சி,
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி மத்திய பஸ் நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் திருச்சி சத்திரம் பஸ் நிலையமும் களையிழந்து காணப்பட்டது. மத்திய பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் மிக குறைந்த அளவிலேயே நின்று கொண்டிருந்தன. இதனால் ஆம்னி பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றன. அந்த பஸ்களில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிக உரிமம் வாங்கி வைத்துக்கொண்டு தனியார் பஸ்கள் போட்டி போட்டு பயணிகளை ஏற்றி சென்றனர்.
அ.தி.மு.க. வை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பஸ்களை ஓட்டுவதற்காக வந்தனர். அவர்களை மற்ற தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்களுக்குள் வாக்குவாதம் , மோதல் ஏற்பட்டது. பெரும்பாலான டவுன் பஸ்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் லாரி டிரைவர்கள் ஓட்டினார்கள். இதனால் அதில் பயணம் செய்த பயணிகளும் ஒரு வித அச்சத்துடனே பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்கத்தின் மத்திய சங்க பொதுச்செயலாளர் குணசேகரன் கூறுகையில் ‘திருச்சி மண்டலத்தில் சுமார் 40 சதவீத அளவிற்கே பஸ்கள் இயக்கப்படுகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்கி இருக்கிறார்கள். நாளை (இன்று) தனியார் கல்லூரி, பள்ளி டிரைவர்கள் அவர்களது நிறுவன பஸ்களை ஓட்டுவதற்கு சென்று விடுவார்கள். எனவே திங்கட்கிழமை முழு அளவில் அரசு பஸ்கள் ஓடாது. நாங்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஏற்கனவே நிர்வாகத்துக்கு நோட்டீசு கொடுத்து இருக்கிறோம். திடீர் என போராட்டத்தில் குதிக்கவில்லை. தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள விளக்க நோட்டீசுக்கு நாங்கள் சட்ட ரீதியாக பதில் அளிப்போம்’ என்றார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் புறப்படாததால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர். பலர் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பஸ்கள் மூலம் சென்றனர். முன்பதிவு செய்த பயணிகளுக்கு எந்த வித பிரச்சினையும் இன்றி சென்னை செல்வதற்கு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story